பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் தளபதி விஜயின் ரசிகர்கள் அவர் நடித்த ‘தெறி’பட காட்சியை நினைவூட்டி வெறித்தனமான போஸ்டர்களை மதுரை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் ஒட்டி வருகின்றனர்.

சமூக வலைதளங்கள் மூலம் மாணவிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் தினந்தோறும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகிறது. அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) மற்றும் தாக்குதல் (354 பி) ஆகியவற்றுடன் சேர்த்து ஐபிசி பிரிவின் கீழ் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். 

மேலும், பல்வேறு நடிகர், நடிகைகளும் இந்த சம்பவம் குறித்து தங்களது கருத்துக்களையும் கண்டனத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்ற நிலையில் விஜய் டிவி நேற்று தான் இந்த சம்பவத்திற்கு வருத்தத்தை தெரிவித்தது. இந்த நிலையில் இந்த சம்பவத்தால் மிகவும் கொதித்துப்போன விஜய் ரசிகர்கள், தமிழகத்தில் பாலியல் குற்றம் புரிபவர்களை விரைவில் தண்டிக்கபட வேண்டும்! இல்லை துடிதுடிக்க தலை துண்டிக்கபட வேண்டும் என வாசகம் இடம் பெற்றுள்ள போஸ்டர் ஒன்றை ஓட்டியுள்ளனர். அதில் தெறி படத்தில் வரும் ஒரு காட்சியை பார்வை படுத்தியுள்ளனர்.