Asianet News TamilAsianet News Tamil

’காஞ்சிபுரம் அத்திவரதரை வைத்து பெரிய சூதாட்டமே நடக்கிறது’...சுகி சிவம் சுளீர்....

காஞ்சிபுரத்தில் லட்சக்கணக்கான தொண்டர்களால் தர்சிக்கப்பட்டு வரும் அத்திவரதர் குறித்து ‘அத்தி வரதப்பா புத்தி வராதப்பா’என்று பிரபல சொற்பொழிவாளர் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அவரது பேச்சை இந்து உணர்வாளர்களில் சிலர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

popular sugi sivam speaks against the lord athivarathar
Author
Chennai, First Published Aug 5, 2019, 9:21 AM IST

காஞ்சிபுரத்தில் லட்சக்கணக்கான தொண்டர்களால் தர்சிக்கப்பட்டு வரும் அத்திவரதர் குறித்து ‘அத்தி வரதப்பா புத்தி வராதப்பா’என்று பிரபல சொற்பொழிவாளர் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அவரது பேச்சை இந்து உணர்வாளர்களில் சிலர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.popular sugi sivam speaks against the lord athivarathar

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுகி சிவம் அத்தி வரதரின் திடீர் பிரபலம் குறித்துப் பேசியபோது,’இவ்வளவு நாட்களாக நம் ஊரில் உள்ள பெருமாளுக்கு வராத 'பவர்' 40 வருடம் தண்ணீருக்குள் இருந்து வந்திருப்பவருக்கு இருக்கும் என்று நினைத்தால்... இதை நான் எங்கோ போய் சொல்வது? அத்தி வரதப்பா... புத்தி வராதப்பா...

இன்றைக்கு இது எவ்வளவு பெரிய சூதாட்டமாக மாறுகிறது. வயதானவர்கள் சென்று நசுங்கி, செத்து, கர்ப்பிணி பெண்கள் சென்று நசுங்கி துன்பப்படுகிறார்கள்.நான் நிஜமாகவே கேட்கிறேன். நாம் கஷ்டப்பட வேண்டும் என்று கடவுள் நினைப்பாரா? நாம் கஷ்டப்பட வேண்டும் என்று நினைத்தால் அவர் கடவுளா? ஒரு நாளும் கடவுள் அப்படி நினைக்க மாட்டார்.

இந்த ஊரில் உள்ள சாமிக்கு இல்லாத சக்தி, அந்த ஊரில் உள்ள சாமிக்கு இல்லாத சக்தி, இதுவரை நாம் கும்பிட்ட எந்த சாமிக்கும் இல்லாத சக்தி, இப்போது புதிதாக கிடைத்திருக்கிற இவருக்கு மட்டுமே இருக்கிறது என்று நினைக்கிறோம்.நீங்கள் இருக்கிறபடி இருந்தால் கடவுள் உங்கள் வீடு தேடி வந்து அருள் செய்யத் தயாராக இருக்கிறார்’என்று பேசினார்.popular sugi sivam speaks against the lord athivarathar

இதையடுத்து மதுரை முத்தையா மன்றத்தில் சவுராஷ்டிரா தொழில் வர்த்தக கருத்தரங்கு நடந்தது. இதில் சொற்பொழிவாளர் சுகி சிவம் பங்கேற்றார். அங்கு செல்ல முயன்ற அவரை ஹிந்து கடவுளை அவமதித்து பேசியதாக கூறி ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சுகு சிவத்தை அவர்கள் மிகவும் மட்டமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்தனர்.அத்து மீறியவர்களில் பத்து பேரை தல்லாகுளம் போலீசார் போலீசார் கைது செய்தனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios