பிரபல திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ் ஆக உள்ளார்.

பிரபல திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில், அகில இந்திய அளவில் 75வது இடத்தைப் பிடித்து தேர்ச்சி பெற்றார். 

யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற ஸ்ருதன் ஜெய் நாராயணன் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பிறகு மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துணை செயலாளராக பணியாற்றினார்.

பின்னர் அவருக்கு தமிழ்நாட்டில் பணி ஒதுக்கப்பட்டது. ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி பயிற்சி துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்னர் திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார் ஸ்ருதன் ஜெய் நாராயணன்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், விழுப்புரம் மாவட்ட ஊரக முகமை திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ் பணியாற்றிய திருப்பூர் மாவட்ட மக்கள், அவரை மிஸ் செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். 

இந்த நிலையில் கிராமம் ஒன்றில் ஆய்வு பணிக்கு ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ் சென்றிருந்தார். அங்குள்ள மக்களிடம் மகிழ்ச்சியாக பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..