pop singer and actor ceylon manohar death

பிரபல பாப் இசை பாடகரும் நடிகருமான சிலோன் மனோகர், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்றிரவு காலமானார்.

இலங்கையை சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் ஏ.இ.மனோகர். தமிழில் சுராங்கனி என்ற பாடலை பாடியதன் மூலம் உலக அளவில் புகழ்பெற்றார். அதன்பிறகு, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல பாடல்களை பாடியதுடன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

1980களில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், சிரஞ்சீவி ஆகிய நடிகர்களின் திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தமிழில் பல டிவி சீரியல்களிலும் சிலோன் மனோகர் நடித்துள்ளார். இந்நிலையில், 73 வயதான சிலோன் மனோகர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்றிரவு காலமானார்.