பிரபல  கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, செப்டம்பர் 10 ஆம் தேதி அன்று தன்னுடைய நீண்டநாள் காதலர் சாம் பாம்பே என்பவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிகவும் எளிமையான முறையிலேயே இவர்களுடைய திருமணம் நடந்தது.

திருமணம் ஆன கையேடு... கணவருடன் திருமண கோலத்தில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். திருமணத்திற்கு பின்னர், கணவருடன் ஹனி மூன் சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிளுகிளுக்க செய்தார்.

இந்நிலையில் அவர் திடீரென திருமணமாகி இரண்டு வாரம் கூட ஆகாத நிலையில், கணவர் சாம் பாம்பே தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், பாலியல் ரீதியாக கொடுமை படுத்தியதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது பூனம் பாண்டேவின் ரசிகர்ளை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சாம்மை கைது செய்தனர்.

இந்த பிரச்சனை நடந்து நான்கு நாட்களே ஆகும் நிலையில் அடுத்த ஷாக் கொடுத்துள்ளார். அதாவது கணவருடன் சமாதானம் ஆகிவிட்டதாக அவரே அறிவித்துள்ளார். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அதிகமாக காதலிப்பதாகவும், தங்களுக்குள் இருந்த பிரச்சனைகள் பேசி தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், எந்த குடும்பத்தில் தான் சண்டை சச்சரவு, ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் உள்ளது’ என மற்றவர்களுக்கே அட்வைஸ் செய்துள்ளார்.

இவரின் இந்த திடீர் பல்டியை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் இவர் அடுத்ததாக என்ன செய்வர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...