உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் பிறந்து வளர்ந்து சொந்த ஊரான பரமக்குடியில் கூடியுள்ளார்.  தனது தந்தையின் சிலையை திறந்து வைக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் பரமக்குடியில் குவிந்துள்ளனர்.

மும்பையில் தங்களது தாயாருடன் வசித்து வரும் கமல்ஹாசன் மகள்களான ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகியோர்களும் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்த அனைவரும் தற்போது பரமக்குடியில் உள்ளனர். அதேபோல் இயக்குனர் மணிரத்னம் மனைவியும் சாருஹாசன் மகளுமான சுஹாசினியும் பரமக்குடிக்கு வருகை தந்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் கமல்ஹாசன் குடும்பத்தினர் ஒரே இடத்தில் ஒரே நாளில் சந்திப்பதால் அக்குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். அவரது உறவினர்களும், சொந்தங்களும் ஒன்று கூடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அதனை பார்க்கும் பலரும் அதிர்ச்சியாகி வருகின்றனர். காரணம் கமலஹாசனுடன் தொடர்ந்து நடித்து வரும் 42 வயது நடிகையான பூஜாகுமார் தனது தாயாருடன் இந்தப் புகைப்படத்தில் இடம்பிடித்துள்ளார். 

கமல்ஹாசன் குடும்ப புகைப்படத்தில் பூஜா குமார் இடம்பிடித்துள்ளது அவரது பிறந்த நாளில் சர்ச்சையாகி வருகிறது. பூஜாகுமார் எப்படா கமலஹாசன் குடும்ப உறுப்பினரானார் என நெட்டிசன்கள் அதிர்ச்சியாகி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.