பிரபல நடிகை பூஜாகாந்தி சொகுசு ஹோட்டலில் தங்கி விட்டு, அதற்கான பில் தொகையை கொடுக்க பணம் இல்லாததால், அங்கிருந்து எஸ்கேப் ஆகி உள்ளது சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், என நான்கு மொழிகளிலும் நடித்துள்ளவர் பெங்களூருவை சேர்ந்த நடிகை பூஜா காந்தி. இவர் தமிழில் 'கொக்கி', 'வைதீஸ்வரன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

சமீப காலமாக திரைப்பட வாய்ப்புகள் சரிவர, கிடைக்காததால் இவர் பிரச்சனையில் சிக்கி கஷ்டப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் பூஜாகாந்தி அறை எடுத்து தங்கியுள்ளார். 

ஆனால் ஓட்டலில் தங்கியதற்கான பில் ரூபாய் 4.5 லட்சம்  தொகையை செலுத்தாமல் அங்கிருந்து  எஸ்கேப் ஆகிவிட்டார். 

ஓரிரு நாட்கள் காத்திருந்த ஹோட்டல் நிர்வாகம், பூஜா காந்தியிடம் இருந்து எந்த பதிலும் வராததால்...  4.5 லட்சம் பில் தொகையை கொடுக்காமல் ஏமாற்றி விட்டு சென்றதாக, நடிகை மீது காவல் துறையில் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் பூஜா காந்தியை விசாரணை செய்தனர்.

அப்போது முதல் கட்டமாக 2 லட்சத்தை ஓட்டல் நிர்வாகத்திடம் கொடுத்த பூஜா காந்தி, மீதமுள்ள பணத்தை பின்னர் தருவதாக கூறியதைத் தொடர்ந்து சில நாட்கள் அவருக்கு கெடு கொடுக்கப்பட்டது. இந்த இந்த தகவல் தற்போது கன்னட திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.