இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமான 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சிம்பு ஆகியோர்கள் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் நாவலின் முக்கிய நாயகர்களில் ஒருவரான வந்தியத்தேவன்' கேரக்டரில் யார் நடிப்பார் என பலரது மனதிலும் ஒரு கேள்வி இருந்த நிலையில், தற்போது அந்த கதாப்பாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த கேரக்டர் வீரம், காதல், காமெடி மற்றும் தந்திரம் என அனைத்திலும் கலக்கும் ஒரு நாயகனாக உருவாக்கப்பட்டிருக்கும். இந்த கதாப்பாத்திரத்திற்கு தான் மணிரத்னம் தற்போது கார்த்தியை தேர்வு செய்துள்ளார்.

அதேபோல் டைட்டில் கேரக்டரான "பொன்னியின் செல்வன்" என்ற ராஜராஜ சோழன் கேரக்டரில் நடிப்பது யார்? என்பது குறித்த தகவலும் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை பல கோடி பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மணிரத்னம் இயக்கிய முந்தைய படமான 'செக்க சிவந்த வானம்' படத்தையும் இதே நிறுவனம் தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது