Ponniyin Selvan Teaser to be released today in Chennai : ஹிந்தி டீசரை, அமிதாப் பச்சன், மலையாளம் மோகன்லால், தெலுங்கு மகேஷ் பாபு, கன்னடத்தில் ரக்ஷித் செட்டி, தமிழில் சூர்யா வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் கனவு படமான பொன்னியின் செல்வன் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வனின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. சோழர்களை பற்றி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

நாவாலில் வரும் கதாபாத்திரங்களுக்காக பன் மொழி ஸ்டார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் அரசர்களாகவும், இளவரசிகளாகவும், வீரர்களாகவும் ஜொலித்துள்ளனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகவுள்ள இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..அடுத்தப்படமே ரெடி! ஆனாலும் குறையாத அரபிக் குத்து மவுசு.. புதிய சாதனை படைத்த விஜய் சாங்!

முன்னதாக வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராய் தொடர்ந்து ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போஸ்டர்களும் வெளியானது. முதலில் சீயான் விக்ரம் " சோழப் பட்டத்து இளவரசரை வரவேற்கிறோம்! கடுமையான போர்வீரன். காட்டுப் புலி. ஆதித்த கரிகாலன்! என அறிமுகப்படுத்தப்பட்டார்.

Scroll to load tweet…

பின்னர் பருத்திவீரன் கார்த்தி." ராஜ்ஜியம் இல்லாத இளவரசன், உளவாளி, சாகசக்காரன்... இதோ வந்தியத்தேவன்" என அறிமுகமானார்.

Scroll to load tweet…

மேலும் செய்திகளுக்கு..இன்று திரையரங்குகளில் யோகி பாபுவின் பன்னிக்குட்டி! முன்னதாக வெளியான அப்டேட்டுகள்!

ராணியாக ஐஸ்வர்யா ராய்," பழிவாங்கும் முகம் அழகானது! பழுவூர் ராணி நந்தினியை சந்திக்கவும்! என குறிப்பிட்டு போஸ்டர் வெளியானது. இதன் மூலம் இவருக்கு நெகட்டிவ் ரோல் இருக்கலாம் என தோன்றுகிறது.

Scroll to load tweet…

மேலும் செய்திகளுக்கு..கப்பலில் வந்த விக்னேஷ்வரன் கருப்புசாமியின் ஃபாரின் சரக்கு!

இவரை தொடர்ந்து த்ரிஷா ,"ஆண்களின் உலகில், தைரியமான பெண். குந்தவை இளவரசி! என அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.

Scroll to load tweet…

இதற்கிடையே படத்தின் டீசர் குறித்த அறிவிப்பும் இன்று வெளியானது . இதன்படி ஹிந்தி டீசரை, அமிதாப் பச்சன், மலையாளம் மோகன்லால், தெலுங்கு மகேஷ் பாபு, கன்னடத்தில் ரக்ஷித் செட்டி, தமிழில் சூர்யா வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

Scroll to load tweet…