Asianet News TamilAsianet News Tamil

‘இளவரசே அதற்குள் விடை பெற முடியாது’... ஜெயம் ரவியை கலாய்த்து கார்த்தி ட்வீட்!

ஜெயம் ரவியின் ட்விட்டர் பதிவு குறித்து நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ள ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Ponniyin selvan shooting actor karthi kidding tweet about Jayam Ravi  wrap from shoot
Author
Chennai, First Published Aug 25, 2021, 10:48 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தென்னிந்திய திரையுலகமே வியக்கும் அளவிற்கு, பல முன்னணி நடிகர்களை வைத்து மிக பெரிய, பட்ஜெட்டில் தயாராகி வருகிறது 'பொன்னியின் செல்வன்' திரைப்படம். இதில் விக்ரம், ஜெய்ராம்,  சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, அஸ்வின்,  த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலர் நடித்து வருகிறார்கள்.  வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார், கலைக்கு தோட்டாதரணி என கைதேர்ந்த பிரபலங்கள் மற்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Ponniyin selvan shooting actor karthi kidding tweet about Jayam Ravi  wrap from shoot

யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், சமீபத்தில் இதுகுறித்த தகவலும் கெட்டப் ஓவியத்துடன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டப்பட்டது. பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், ஆழ்வார்க்கடியனாக ஜெயராம் ஆதித்ய கரிகாலனாக சியான் விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா , ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவி நடிப்பது உறுதியாகியுள்ளது.  மணிரத்னத்தின் ஃபேவரைட் ஹீரோயினான ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. 

Ponniyin selvan shooting actor karthi kidding tweet about Jayam Ravi  wrap from shoot

இந்நிலையில் இந்த பாத்தின் படப்பிடிப்பு, புதுச்சேரி, ஹைதராபாத் என பல்வேறு இடங்களில் நடந்து வந்த நிலையில்... சமீபத்தில் படக்குழுவினர் மத்திய பிரதேசம் சென்றனர். அங்கு பெரிய பெரிய அரண்மனைகளுக்கு நடுவே படப்பிடிப்பு ... எடுத்த புகைப்படத்தை திரிஷா புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது, நடிகர் ஜெயம் ரவி... பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்து விட்டதாக, ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

இதுகுறித்து ஜெயம் ரவி போட்டுள்ள பதிவில்,  "உங்கள் ஆசீர்வாதம், உங்கள் நகைச்சுவை உணர்வு, உங்கள் அக்கறை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக என்னை நம்பியதற்கு நன்றி சார். உங்களுடன் செட்டில் இருப்பதை நான் உண்மையில் மிஸ் பண்ணுகிறேன், உங்களுடன் மீண்டும் வேலை செய்யும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விடைபெறுவதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ஜெயம் ரவியின் ட்விட்டர் பதிவு குறித்து நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ள ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் இளவரசே @actor_jayamravi  நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம் - வந்தியத்தேவன் என காமெடியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் இன்னும் 6 நாட்களுக்கு ஷூட்டிங் இருப்பதும், அதை முடித்துக்கொண்டு இருவரும் ஒன்றாக கூட சென்னை திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios