கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு தற்போது கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற்று வருகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தாய்லாந்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

 

இதில் மேலும் விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ரகுமான், கிஷோர் உள்ளிட்டோரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 400 கோடி செலவில் லைகா நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்ட தயாரித்து வருகிறது. 

இந்நிலையில் "பொன்னியின் செல்வன்" படத்திற்கான டைட்டில் ஃபான்ட் தற்போது வெளியாகியுள்ளது. வீரமான வாளின் நடுவே பொன்னியின் செல்வன் படத்திற்கான ஆங்கில தலைப்பு வெளியாகியுள்ளது. சிம்பிளாக இருந்தாலும் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் ஃபான்ட் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் அதில் கதை கல்கி, இசை ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு ரவிவர்மன், எடிட்டர் ஸ்ரீதர் பிரசாத், கலை தோட்டா தரணி, திரைக்கதை மற்றும் இயக்கம் மணிரத்னம் என மொத்த டெக்னீக்கல் டீம் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.