போடுடா வெடிய... 'பொன்னியின் செல்வன் 2' ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன் 2' படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது வெளியாகியுள்ளது.
 

ponniyin selvan 2 release date officially announced

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான நிலையில், சுமார் 500 கோடி வசூலை வாரிக் குவித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இன்று பொன்னியின் செல்வன் 2 குறித்த முக்கிய தகவலை இன்று வெளியிட உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்த நிலையில், தற்போது அந்த தகவல் வெளியாகியுள்ளது.

ponniyin selvan 2 release date officially announced

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு 'பொன்னியின் செல்வன் 2' ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்திய தேவனாக கார்த்தியும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், கரிகாலனாக விக்ரமும், நடித்திருந்தனர். மேலும் குந்தகையாக நடிகை த்ரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராய்யும் வானதியாக சோபிதா துளிபாலாவும் நடித்துள்ளனர்.

ஓநாயின் குணாதிசயம் கொண்ட ஹீரோவாக நடிக்கும் பிரபு தேவா நடித்துள்ள 'வுல்ஃப்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜெய் சித்ரா, பிரகாஷ் ராஜ்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சோழ மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றை புனைய பட்ட நாவலாக, கல்கி 5 பாகங்களாக எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை மையமாக வைத்தே இப்படம்  எடுக்கப்பட்டுள்ளது.

ponniyin selvan 2 release date officially announced

இப்படத்தின் முதல் பாகம் வெளியான போது, ஒரு சில ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும், மற்ற சில ரசிகர்கள் மத்தியில் நெகடிவ் விமர்சனங்களையும் பெற்றாலும், இப்படத்திற்காக படக்குழுவினர் பட்ட கஷ்டங்களை ஒவ்வொரு ஃபிரேமிலும் பார்க்க முடிந்தது. சுமார் 2000-திருக்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட இந்த நாவலை, நேர்த்தியாக இப்படித்தான் இயக்க முடியும் என சில சினிமா விமர்சகர்களும் இப்படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர். 

தனுஷை விவாகரத்து செய்த பின்... ஹீரோயின்களுக்கு நிகராக போட்டோ ஷூட்டில் கலக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது, ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios