லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகி இருக்க வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது. அதன் பின்னர் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதால் பார்வையாளர்கள் கூட்டம் குறைவாகவே வந்தது. 

இதனால் மாஸ்டர் வெளியீடு தள்ளிப்போன நிலையில், பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி படத்தை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனிடையே தமிழக அரசும் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என அறிவித்தது. இது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் தினமும் வெளியாகும் புரோமோ வீடியோக்களால் விஜய் ரசிகர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். 

அந்த வகையில் சற்று முன்னர் 'மாஸ்டர்' படத்தின் புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இன்றைய புரமோ வீடியோவில் ‘வாத்தி ரெய்டு’ பாடலின் பின்னணியில் தளபதி சும்மா ஆக்ஷனில் பின்னி பெடல் எடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்த புரோமோவை பார்த்த தளபதி ரசிகர்கள், ஒவ்வொரு காட்சியும் புல்லரிக்க வைக்கும் விதத்தில் இருப்பதாகவும், இப்போதே படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாக வெறித்தனம் கட்டி வருகிறார்கள்.

தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ...