சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பின், பொங்கல் விருந்தாக ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் 'தர்பார்'. இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்க கூடிய படமாக இருக்கும் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடித்து வருகிறது.

இந்த படம் குறித்து, புதிய புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பேபி மானஸ்வியின் தந்தை கொட்டாச்சி, தர்பார் ஷூட்டில் நடந்த விஷயத்தை பற்றி கூறியுள்ளார்.

தலைவர் ஒரு நாள், படப்பிடிப்பின் இடைவெளியில் மானஸ்வியிடன் நீ பெரியவளாக வளர்ந்ததும் என்னவாக போகிறாய் என கேள்வி எழுப்பியுள்ளார் இதற்கு, மானஸ்வி தான் பெரிய பெண் ஆனதும் ஹீரோயின் ஆகி, உங்களுக்கு ஜோடியாக நடிப்பேன் என  கூறியுள்ளார்.

மானஸ்வியிடம் இருந்து இந்த பதிலை சற்றும் எதிர்பாராத அவர், வயிறு குலுங்க சிரித்துள்ளார். இந்த சிரிப்பு அடங்குவதற்க்கே சில நிமிடங்கள் ஆனது என கூறியுள்ளார் கொட்டாச்சி.