Asianet News TamilAsianet News Tamil

நம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம்..! பொங்கல் வாழ்த்து கூறிய ராஜ் கிரண்..!

தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் என தன்னுடைய திறமையால் மெல்ல மெல்ல உயர்ந்தவர் நடிகர் ராஜ்கிரன். இப்போது அவருக்கு ஏற்ற போல் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து  அப்பா மற்றும் தாத்தா வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார்.
 

pongal entertainment rajkiran pongal wishes
Author
Chennai, First Published Jan 15, 2021, 6:18 PM IST

தயாரிப்பாளர், இயக்குனர், கதாநாயகன் என தன்னுடைய திறமையால் மெல்ல மெல்ல உயர்ந்தவர் நடிகர் ராஜ்கிரன். இப்போது அவருக்கு ஏற்ற போல் கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து  அப்பா மற்றும் தாத்தா வேடங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

அவர் திரையுலகிற்கு வந்து, 27 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இந்த 27 வருடங்களில் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். நிறைய படங்களில் நடித்து நிறைய கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை பேராசை எதுவும் இல்லை கதையும் கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன் என்கிறார்.

pongal entertainment rajkiran pongal wishes

இந்நிலையில், பொங்கல் வாழ்த்தை தெரிவிக்கும் விதத்தில்... பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, நம் இந்திய நாடு, விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. சுதந்திரத்துக்குப் பின், நம்மை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் தவறான கொள்கை முடிவுகளால், மீண்டும், அந்நிய கார்ப்பரேட்டுகள், பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி என்ற பெயர்களால், மிகவும் தந்திரத்துடன், உரம், பூச்சிக்கொல்லி, வீரிய கலப்பினம் என்ற பெயர்களில் விஷத்தை நம் கைகளாலேயே போட வைத்து, நம் செல்வங்களை கொள்ளையடித்ததோடு, நம் மண்ணையும் மலடாக்கி விட்டார்கள்.

pongal entertainment rajkiran pongal wishes

அதன் காரணமாக, இன்று நம் விவசாயப் பெருமக்கள், வாழ வழி தெரியாமல் தவிப்பதோடு,தற்கொலையும் பண்ணிக் கொள்கிறார்கள். விவசாயத் தொழிலை ஆதாரமாக வைத்து இயங்கிய சிறு, குறு வணிகப் பெருமக்களும் வழி தெரியாமல் தவித்து நிற்கின்றனர். இது போக, விவசாயம் பொய்த்துப் போனால், விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி, நம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும், கனிம வளங்களை, அரசியல்வாதிகளின் துணையோடு கொள்ளையடிக்க, கார்ப்பரேட்டுகள் முயன்று கொண்டிருக்கின்றனர்.

pongal entertainment rajkiran pongal wishes

நாம் விழித்துக் கொள்ள வேண்டிய கடைசி நேர கட்டாயத்தில் இருக்கிறோம். நம்மாழ்வார் ஐயா அவர்கள், காட்டிச்சென்ற வழியைப் பின்பற்றி, இயற்கை விவசாயத்துக்கு மாறி, நம் மண்ணை உயிர்ப்பித்து, பயிர் செய்து, மதிப்புக் கூட்டு முறையில் வருமானத்தைப் பெருக்கி, விவசாய பெருமக்கள் தலை நிமிர்ந்து மகிழ்ச்சியோடு வாழ, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக் கிறேன். இவ்வொரு அடி, மண்ணும், அதனுள் இருக்கும் கனிம வளங்களும், நம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம். அவற்றை நம் சந்ததியினருக்காக பேணிப் பாதுகாக்க, இந்த நல்ல நாளில் உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios