தளபதி விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படக்குழு சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'கபடி' பாடலை வெளியிட்டுள்ளனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் போகி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 9 மாதங்களுக்குப் பிறகு மாஸ் ஹீரோ படம் வெளியாகியுள்ளதால் தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டிருந்தது. 

ரசிகர்களும் மாஸ்டரை வரவேற்க, எங்கு பார்த்தாலும் தோரணம், கட்அவுட், போஸ்டர்கள், ஆட்டம் பாட்டம், மேளம் தாளம் என ஜாமாய்த்துவிட்டனர். ஆனால் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு சிறு வருத்தம் என்றாலும், ரசிகர்கள் காட்சி போடப்பட்டதால் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மேலும் இன்று, படக்குழுவினர் ரசிகர்களுடன் படம் பார்த்து மகிழ்ந்தனர். அதே போல் பிரபலங்கள் பலரும் 'மாஸ்டர்' படத்தை பார்த்து விட்டு இது, தளபதிக்கு ஒரு மாஸ்டர் பீஸ் என தாறுமாறாக புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். 

இந்த சந்தோஷத்தில் இருந்து ரசிகர்கள் மீண்டு வருவதற்குள் படக்குழு தளபதி ரசிகர்களுக்கு மற்றொரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. சற்று முன் படக்குழுவினர் 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்றுள்ள கபடி பாடலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த பாடல் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

நீங்களே கேளுங்கள்...