Asianet News TamilAsianet News Tamil

Ajith : ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தவே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டாரா அஜித்? - பேசுபொருளான ‘வலிமை’ பாடல்

அம்மா செண்டிமெண்டை மையமாக வைத்து அஜித்தின் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். 

politics behind ajith valimai movie amma song
Author
Tamil Nadu, First Published Dec 5, 2021, 4:38 PM IST

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். இப்படட்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

politics behind ajith valimai movie amma song

பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வலிமை படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுக்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இப்படடத்தின் டீசர், முதல் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே வலிமை படத்தின் 2-வது பாடல் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அம்மா செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இப்பாடல் வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி உள்ளார்.

politics behind ajith valimai movie amma song

இந்நிலையில், வலிமை படத்தின் 2-வது சிங்கிள் பாடலான அம்மா பாடல் இன்று வெளியிடப்படுவதற்கு பின்னணியில் ஒரு முக்கிய நிகழ்வும் ஒளிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தமிழக மக்கள் செல்லமாக அம்மா என்றே அழைப்பார்கள். இன்று அவரது நினைவு நாள்.

நடிகர் அஜித், ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகத் தான் அஜித் இன்று அப்பாடலை வெளியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அரசியலே வேண்டாம் என நடிகர் அஜித் ஒதுங்கி இருந்தாலும், அவரை சுற்றி அரசியல் சர்ச்சைகள் குறைந்தபாடில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios