திரையரங்கங்கள் செல்ல நடுத்தர மக்கள் தயங்கி ஒதுங்குவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, பார்க்கிங் கட்டணமும், சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் தின்பண்டங்கள் விலை... வெளியில் விற்பனை செய்யப்படுவதை விட பல மடங்கு அதிகம் என்பதாலும் தான். 

இந்நிலையில் சமீபத்தில் திரையரங்க கட்டணம் குறைக்கப்படும் என்று அறிவித்த போதிலும் அத்தனை வாக்குறுதிகளும் தற்போது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இந்நிலையில் புனேவில் உள்ள ஒரு திரையங்கில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை அறிந்து, அந்த தியேட்டருக்கு சென்ற ராஜ் தாக்கரேவின் மகராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் அந்த தியேட்டர் மேலாளரை கன்னத்தில் அறைந்து கடுமையாக தாக்கினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.