சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய அரசியல் கட்சி குறித்தும், எப்போது வருவேன், என்பது பற்றியும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் அரசியல் கட்சி எப்படி செயல்படும் என்பது குறித்தும், யார் யாருக்கு சீட்டு கொடுக்கப்படும், எப்படி பட்ட முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.  அதேபோல்,  தனக்கு முதல்வர் ஆகும் ஆசை இல்லை என்பதை ஆணித்தனமாக கூறிய ரஜினிகாந்த்,  அரசியல் கட்சி குறித்து மூன்று முக்கிய திட்டங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இவரின் அரசியல் பேச்சு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.  பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இவரின் பேச்சுக்கு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரிடம், செய்தியாளர்கள் ரஜினியின் அரசியல் பற்றி கருத்து  கேட்டபோது, ரஜினியின் அரசியல் பற்றி கருத்து கூற வேண்டுமென்றால் ஊடகங்கள் தன்னுடைய வங்கி கணக்கிற்கு ரூபாய் 5 லட்சம் பணம் போட வேண்டுமென்றும், அவ்வாறு பணம் போட்டால் மட்டுமே ரஜினி குறித்து கருத்து தெரிவிப்பேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.