அண்மைய காலமாக நடிகைகள் சிலர் பாலியல் துன்புருத்தளுக்கு ஆளாக்கப்படுவதை தைரியமாக போலீசில் கூறி, இப்படி அநாகரீகமாக நடந்துக்கொள்ளும் நபர்களை பற்றி தெரிவித்து அவர்களுக்கு தகுந்த தண்டனையும் பெற்று தருகின்றனர். 

கடந்த மாதம் கூட நடிகை அமலாபால் தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டதாக சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து... அந்த தொழிலதிபரை ஒரு மணி நேரத்தில் கைது செய்தனர் போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மும்பையை சேர்ந்த 37 வயது நடிகை ஒருவர் அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஜிம்மிற்க்கு தினமும் செல்வது வழக்கம். 

அவரை NCP கட்சியை சேர்ந்த விஸ்வநாத் ஷெட்டி என்கிற அந்த கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் தொடர்ந்து நடிகையிடம் தவறாக பேசியும் தொடர்ந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தன் ஆசைக்கு இணங்கும்படி பலமுறை அந்த நடிகையை வற்புறுத்தியது மட்டும் இன்றி தொடந்து தொலைபேசியில் பல ஆபாசமாக மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.

இந்த நடிகை பல முறை இவரை கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி அந்த நடிகையிடம் விஸ்வநாத் ஷெட்டி பேச முற்பட்ட போது அவர் நிற்காமல் சென்றுவிட்டார், பின்னர் அவரை தடுத்து நிறுத்தி தகாத முறையில் நடந்துக்கொண்டுள்ளார் விஸ்வநாத் ஷெட்டி.

இதனால் அதிர்ச்சியான அந்த நடிகை போலீசில் புகார் அளித்தார். அன்று முதல் விஸ்வநாத் ஷெட்டி தலைமறைவாகிவிட்டார். அவர் கர்நாடகாவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து விரைந்து கைது செய்துள்ளனர் போலீசார்