ஓவியா அறிமுகமான 'களவாணி' திரைப்படம் வெற்றி படமாக அமைந்தாலும், இந்த படத்தை தெடர்ந்து வெளியான பல படங்கள் இவருக்கு தோல்வியை கொடுத்தது. எனினும் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் உலக நாயகன் கமலஹாசன் தொகுப்பாளராக மாறினார்.

ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இல்லை என்றாலும், நாட்கள் செல்ல செல்ல இவரிடம் இருந்த உண்மை, மற்றும் இவர் நேர்மையாக நடந்து கொண்ட விதம், ரசிகர்களை இவருடைய பக்கம் திருப்பியது. 

ஓவியா தான் பிக்பாஸ் முதல் சீசன் வெற்றியாளராக இருக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டனர்.  ஆனால் ஓவியா ஆரவ்வை காதலித்து ஏமாற்றம் அடைந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உடல் நலம் இன்றி வெளியேறினார்.

இந்த நிகழ்ச்சியில் மூலம் இவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தது மட்டும் இன்றி, ஓவியா ஆர்மி என்கிற அமைப்பும் உருவாக்கி பலர் ஓவியாவிற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று ஓவியா நடிப்பில், 90 எம் .எல் திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் ஹாட் விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தில் சில நல்ல கருத்து  இருந்தாலும், ஆண்களுக்கு சமமாக பெண்களும் புகை, மது, கஞ்சா என தவறான வழியில் செல்வதா என விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஓவியா, மிகவும் போல்டாக பேச, அதனை பார்த்த அரசியல் பிரமுகர் ஒருவர், ஓவியாவை விரைவில் வரவிருக்கும் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய வைத்து விடலாம் என எண்ணி, அவரை நேரடியாக சந்தித்து பேரம் பேச சொல்லியுள்ளார். 

இதற்காக ஒரு கோடிவரை ஓவியாவிற்கு தருவதாக கூறி ஆசை காட்டியுள்ளனர்.  ஆனால் வலையில் சிக்காத ஓவியா, படம் எடுக்குறதுனா சொல்லுக நடிக்கிறேன், அரசியல் எனக்கு ஒத்து வராது என விடாப்பிடியாக பேச, வந்த வேகத்தில் கொண்டு வந்த பெட்டியுடன் திரும்பினாராம் அந்த அரசியல் கட்சி பிரமுகர் சார்பாக வந்த நபர். இது குறித்து தெரிவித்த ஓவியா, எந்த அரசியல் கட்சி என்பதை மட்டும் சொல்ல மறுத்து விட்டார்.