Asianet News TamilAsianet News Tamil

தற்கொலைக்கு தூண்டும் வகையில் டார்ச்சர் செய்யும் காவல் துறையினர்!! நீதிபதியிடம் மீரா மிதுன் புகார்!!

நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் மீரா மிதுனை கைது செய்துள்ள போலீசார், இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தியபோது, தன்னை தற்கொலைக்கு தூண்டும் விதமாக போலீசார் டார்ச்சர் செய்வதாக நீதிபதியிடம் மீரா மிதுன் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Police torture to incite suicide meera mithun compliant to judge
Author
Chennai, First Published Sep 3, 2021, 4:05 PM IST

நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் மீரா மிதுனை கைது செய்துள்ள போலீசார், இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தியபோது, தன்னை தற்கொலைக்கு தூண்டும் விதமாக போலீசார் டார்ச்சர் செய்வதாக நீதிபதியிடம் மீரா மிதுன் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை மீராமிதுன்,  பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டது, தொடர்பாக அவர் மீது அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து புகார் அளித்த நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  இவருக்கு கடந்த 11ம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி மீரா மீதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 

Police torture to incite suicide meera mithun compliant to judge

ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக், தொடர்ந்து தன்னை முடிந்தால் கைது பண்ணுங்கள் என திடீராக பேசி வீடியோ வெளியிடவே, இவருக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தது. பின்னர் கடந்த 14 ம் தேதி தலைமறைவாக இருந்த மீரா மிதுனை,  தமிழக போலீஸ் பொறிவைத்து கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

Police torture to incite suicide meera mithun compliant to judge

இவரிடம் விசாரணை நடத்திய பின்னர் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், இருவரையும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீரா மிதுனை ஜோ மைக்கல் கொடுத்த வழக்கு தொடர்பாக மீண்டும் ஒருமுறை கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு எழும்பூர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

Police torture to incite suicide meera mithun compliant to judge

மேலும் மீரா மிதுன் பட்டியலின மக்கள் பற்றி பேசிய வழக்கு ஆரம்ப நிலையிலேயே இருப்பதாக கூர் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை இவரது காவல் நீடிக்கப்பட்ட நிலையில், மீரா மிதுன், கடந்த 2019ம் ஆண்டு நட்சத்திர விடுதி மேலாளரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் மீரா மிதுன் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Police torture to incite suicide meera mithun compliant to judge

அந்த வழக்கில் மீரா மிதுன் மீது 30 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று தாக்கல் செய்தனர். தற்போது எழும்பூர் காவல்நிலையத்தில் உள்ள அந்த வழக்கிலும் புழல் சிறையில் இருக்கும் மீராமிதுன் 2வது முறையாக கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து இன்று இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வந்த வந்த போது, "மீரா மிதுன் நீதிபதியிடம் போலீசார் தன்னை தற்கொலைக்கு தூண்டும் வகையில் டார்ச்சர் செய்வதாக புகார் அளித்துள்ளார்" இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கிலும், நடிகை மீரா மிதுனுக்கு எழும்பூர் நீதி மன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios