விஜய் மக்கள் இயக்கத்தினரின் வாகன பேரணிக்கு அனுமதி தர மறுத்த போலீசார் - காரணம் என்ன?
விஜய்யின் பிறந்தநாளையொட்டி தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக மக்கள் இயக்கத்தினர் நடத்த இருந்த வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
நடிகர் விஜய்யின் 49-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இதுதவிர சோசியல் மீடியாவில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது ஒருபுறம் இருக்க, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் நடத்த இருந்த வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு விஜய் ரசிகர்கள் வாகனப் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக இந்த பேரணியை நடத்த விஜய் மக்கள் இயக்கத்தினர் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இதையும் படியுங்கள்... ரூ.400 கோடிக்கு மேல் சொத்து... விதவிதமான சொகுசு கார்கள் என ராஜ வாழ்க்கை வாழும் விஜய் பற்றிய ஆச்சர்ய தகவல்கள்
இந்த நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் நடத்த இருந்த வாகனப் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுத்துள்ளது. இறுதி நேரத்தில் கடிதம் கொடுத்ததன் காரணமாக வாகனப் பேரணிக்கு அவிநாசி காவல்நிலைய போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். காவல்துறை அனுமதி மறுத்ததன் காரணமாக இந்த வாகனப் பேரணி நடத்தும் முடிவை கைவிட்டுள்ளனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
மொத்தம் 50 வாகனங்களில் வாகனப் பேரணி நடத்தி மக்களுக்கு பயன்படும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த நிலைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர், அதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால் மிகவும் அப்செட் ஆகிப் போகினர். இதையடுத்து வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... ரசிகையை காதலித்து திருமணம் செய்துகொண்ட தளபதி... விஜய் - சங்கீதாவின் கியூட்டான லவ் ஸ்டோரி பற்றி தெரியுமா?