நடிகை சமந்தாவின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆண் பிணம் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவந்த போலீசார் இது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய முன் தினம்,  நடிகை சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவின் தந்தை, நாகர்ஜுனாவிற்கு சொந்தமாக ஆந்திர மாநிலம், பாப்பிரெட்டிகுடா என்ற கிராமத்தில் 40 ஏக்கர் அளவில் பண்ணை நிலம் உள்ளது.

இந்த நிலத்தில், நாகர்ஜுனா குடும்பத்தினர் எந்த ஒரு விவசாயமும் செய்யாமல் உள்ளனர். மேலும் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது, இரண்டு முறையை அங்கு சென்று, அந்த நிலத்தை பார்த்து வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன், நாகார்ஜுனாவிற்கு சொந்தமான நிலத்தில் இருந்து, துறுநாற்றம் வீசியுள்ளது. பின் அங்கு தேடி பார்த்ததில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கு இது குறித்து உடனடியாக தகவல் கொடுத்தனர். 

இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார். அழுகிய நிலையில் கிடந்த ஆண் பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அடையாளம் தெரியாத ஆண் சடலம் யாருடையது என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இறந்தவர் யார் என்பது குறித்த தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். நாகர்ஜூனாவில் நிலத்தில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தவர் பெயர் சக்காளி குண்டு (30 ) என தெரியவந்துள்ளது. அவர் பாப்பிரெட்டி குண்டா பகுதியை சேர்ந்தவர் என்றும், குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு சில ஆண்டுகளுக்கு முன் வெளியேறி விட்டதாகவும், சம்பவம் நடைபெற்ற அன்று தான் தற்கொலை செய்து கொள்ளபோவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என அவருடைய பெற்றோர் கூறியுள்ளனர். என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.