விஜய் சேதுபதி மகளுக்கு, ட்விட்டர் பக்கத்தில் மர்ம ஆசாமி ஒருவர் காது கூசும் கேவலமான வார்த்தைகளை பதிவிட்டு, பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் விஜய் சேதுபதி ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த நபர் மீது தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

சமீப காலமாகம், பிரபலங்கள் எந்த ஒரு சர்ச்சையில் சிக்கினாலும், அவர்களையும் தாண்டி அவர்களது குடும்பத்தையும் சிலர் போலி சமூக வலைதள கணக்குகள் மூலம் விமர்சனம் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், இவர் இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வரும் 800 என்ற படத்தில் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மர்ம ஆசாமி ஒருவர் அசிங்கமான வார்த்தையால் விஜய் சேதுபதியின் பிஞ்சு மகள் பற்றி விமர்சனம் செய்திருந்தார்.

முத்தையா முரளிதரன் சிங்கள அரசின் கைக்கூலி என்றும் எனவே அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது எனவும் தமிழகம் முழுவதும்  கண்டன குரல்கள் எழுந்தன. முத்தையாவிற்கு எழுந்த கண்டனங்களை அறிந்த அவர், விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகி கொள்ளலாம் என அறிக்கை மூலம் தெரிவித்தார்.

ரசிகர்கள் மற்றும் மக்களின் விருப்பப்படியே விஜய் சேதுபதியும் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன் என்பதை, முத்தையா முரளிதரனின் அறிக்கைக்கு நன்றி, வணக்கம் என பதிவிட்டு வெளிப்படுத்தினார். எனினும் ஒரு தனி நபரின் மீது உள்ள கோவத்தில், நேர்மாறாக அவரது குடும்பத்தினரை பற்றி கேவலமான வார்த்தையால் விஜய் சேதுபதியின் பிஞ்சு மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய வேண்டும் என, ரசிகர்கள் மட்டும் அல்லது.... சில அரசியல் பிரபலங்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.