police file the case for balaji nithiya reveal
வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து, பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்தியா கொடுத்துள்ள புகார் மீது தற்போது காவல்நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் நிலையம், கோர்ட் என பல இடங்களுக்குச் சென்றும் நியாயம் கிடைக்காத அவரது மனைவி நித்தியா, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து தன்னுடைய மனதில் உள்ள குமுறல்களைக் கொட்டித் தீர்த்தார்.
அப்போது தன்னுடைய கணவர் பாலாஜி தன் மீது பல புகார்களைக் கூறி வருகிறார் என்று தெரிந்தும் அவர் ஒரு பிரபலமாக இருப்பதால் காவல் துறையினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். பத்திரிகையாளர்கள் தங்களுக்குள் நடக்கும் பிரச்சனை குறித்து பேசத் துவங்கியதும்தான் அவர் மீது FIR பைல் செய்தனர். இருப்பினும் அவர் மீது தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல். மாதவரம் காவல் நிலையத்தில் தன்னைத் தான் பெண் காவலாளி ஒருவர் மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார் நித்தியா.
