பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்தது போலீஸ் ..! மீரா மிதுனுக்கு ஆப்பு...! 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர் மீரா மிதுனிடம் சென்னை எழும்பூர் போலீசார் கடந்த ஒரு மணி நேரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 16 ஆவது போட்டியாளராக மாடல் அழகியான மீரா மிதுனின் தாயார் சியாமளா சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுத்து உள்ளார்.  

இதற்கு முன்னதாக, "தனக்கு எதிராக தொழில் போட்டியாளர் ஜோ மைக்கேல் சதி செய்கிறார்கள் என்று பிரபல மாடல் மீரா மிதுன் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்திருந்த நிலையில், மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை மீரா மிதுன் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதாக கூறி 2016 - ஆம் ஆண்டு தாங்கள் அவருக்கு வழங்கிய மிஸ் சௌத் இந்தியா பட்டத்தை ரத்து செய்வதாகவும், மீரா மிதுன் இந்தப் பட்டத்தை வேறு எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த அமைப்பு கடந்த மே 30 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பதால், இவர் குறித்து, ஜோ மைக்கேலிடம் youtube சேனல் ஒன்று நடத்திய நேர்காணலில், மீரா மிதுனை மிரட்டும் வகையிலும், அவரை விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வைப்பேன்.. என தெரிவித்து இருந்தார். இதனை பார்த்த, மீரா மிதுனின் தாயார் சியாமளா ஜோ மைக்கேல் மீது, சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு கொடுத்து இருந்தார்.

இதற்கிடையில், ஜோ மைக்கேல் மீரா மிதுனை எப்படியாவது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி அவரை பழிவாங்க, தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது, சென்னை எழும்பூர் போலீசார் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மீரா மிதுனிடம் விசாரணை நடத்தினர்.