police complient for bharathi raja
கடந்த சில நாட்களாகவே, கவிஞர் வைரமுத்து ஆண்டாள் நாச்சியார் பற்றி கூறிய கருத்துக்கு பக்தர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை போராட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் ஒரு சில பிரபலங்கள் வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசி வருவது அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் இயக்குனர் பாரதி ராஜா வைரமுத்துவுக்கு ஆதரவாக ஆயுதம் எடுப்போம், என நேற்று நடைபெற்ற பட விழா ஒன்றில் கலந்துக்கொண்டு பேசினார்.
இது தொடர்பாக இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் பாரதிராஜா மீது, வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவருடைய பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாக அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
