பிரபல அரசியல்வாதியும், நடிகருமான ஜே .கே.ரித்தீஷ் கடந்த மாதம், தேர்தல் பிரச்சாரத்திற்காக ராமதபுரத்திற்கு சென்ற போது, திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் இவருடைய மனைவி ஜோதி, ஆபாசமாக பேசியும் அடியாட்களை கொண்டு வந்து, மிரட்டல் விடுவதாகவும் அவருடைய வீட்டில் வேலை செய்த கேசவன் என்பவர், சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரில் கூறியுள்ளதாவது... "கடந்த 10 ஆண்டுகளாக ஜே .கே .ரிதீஷிடம் நான் பணியாற்றி வருகிறேன். அவர், அவருக்கு சொந்தமான வீட்டில் தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் தங்கி கொள்ளுமாறு கொடுத்து விட்டார். இதனால் அவரிடம் பணி செய்ததற்கான ரூ.4 லட்சம் பணத்தை நான் பெறவில்லை.

இந்நிலையில் அவருடைய மனைவி ஜோதி, தனக்கு வர வேண்டிய தொகை ரூ.4 லட்சத்தை கொடுக்காமல், வீட்டை காலி செய்ய வேண்டும் என, அடியாட்களுடன் வந்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுப்பதாக கூறியுள்ளார். அதே போல் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஜோதியிடம் வீட்டை கொடுத்து விட்டு ஓடிவிடு என, தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தன்னுடைய புகாரில் கூறியுள்ளார்.

கேசவன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் ஜே .கே.ரித்தீஷ் மனைவி ஜோதியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.