விட்டால் முருகதாஸின் உதவி இயக்குநர் காலத்து சங்கதிகளை எல்லாம் தோண்டி எடுப்பார்கள் போல.  காலம் கடந்து ‘கத்தி’ பட பஞ்சாயத்து ஒன்று  முதல்வர் எடப்பாடி தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து வளசரவாக்கம் காவல் நிலையத்தை வந்தடைந்திருக்கிறது.

விஷயம் இதுதான்...

அன்பு ராஜசேகர் இயக்கிய ’தாகபூமி’ குறும்படத்தை திருடி கத்தி திரைப்படமாக எடுத்த திரு.AR.முருகதாஸ் மீது காப்புரிமை சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்ககோரி மாண்புமிகு தமிழக முதல்வர் இல்ல அலுவலகத்தில் (Chiefminister camp office) கடந்த நவ.22-ம் தேதி புகார் மனு அளிக்கப்பட்டது.

புகார் மனு அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் பிரிவு அலுவலர் அவர்களால் கடிதம் ஒன்று திநகர் மதிப்பிற்குரிய Depty Commissioner அவர்களின் கவனத்திற்கு அனுப்பப்பட்டது.

புகார் மனு சரிபார்க்கப்பட்டு வளசரவாக்கம் மதிப்பிற்குரிய Assistant Commissioner அவர்களின் கவனத்திற்கு அனுப்பப்பட்டது. Assistant Commissioner அவர்கள் காப்புரிமை சட்டத்தை சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

புகார் மனு தொடர்பாக வளசரவாக்கம் மதிப்பிற்குரிய காவல் ஆய்வாளர் தலைமையில் *விசாரணை மேற்கொள்ள Assistant Commissioner அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.*

இனி வளசரவாக்கம் காவல்நிலையத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டுக் கதவை எப்போது தட்டுவார்கள் என்பது தெரியவில்லை.