தன்னை ஒரு பெரும் மேதாவி போல் நினைத்துக்கொண்டு நடிகை கஸ்தூரி ட்விட்டரில் போடும் பதிவுகளில் பல அரைவேக்காடு, கால்வேக்காடு வகைகளைச் சேர்ந்தவை. அதிலும் ஜாதிய சமத்துவத்துக்காக அவர் விடுக்கும் அரைகுறை கூவல்கள் இருக்கிறதே... அய்யகோ என்னத்தைச் சொல்ல? 

அந்த புரட்சி மனப்பான்மையுடன், கஸ்தூரி அரைகுறையாகப் புரிந்துகொண்டு போட்ட ஒரு ட்விட்டருக்கு கவிஞர் சுகிர்த ராணி, ‘ஏ புள்ள நீ எட்டாம் கிளாஸ் கூட படிக்காதவளா? என்று கேட்பதுபோல் செவிட்டில் ஒரு அறை விட்டிருக்கிறார்.

...சாதி  இந்து வழக்கம் என்று இந்து மக்களை எதிர்ப்பவர்கள், இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?
 இஸ்லாத்தில் சாதிக்கொடுமை இல்லை என்றால் இது என்ன?- கஸ்தூரி

...டிசம்பர் 6ம் தேதி நடைபெற இருக்கும் அம்பேத்கர் நினைவுநாள் சுவர் விளம்பரத்தில் எழுதப்பட்டுள்ள  ’தலித்இஸ்லாமியர்’என்ற வாசகம் இடம் பெற்றிருந்ததே கஸ்தூரியில் பொங்கலோ பொங்கலுக்குக் காரணம்.

கஸ்தூரிக்கு கவிஞர் சுகிர்த ராணி....

ஏண்டி கொழந்தே கஸ்தூரி..அது தலித் இஸ்லாமியர்கள் இல்லடியம்மா.. உம்மைத்தொகை...தலித்துகளும் இஸ்லாமியர்களும்னு வரும்.. எட்டாம் வகுப்பு இலக்கணத்திலேயே வருதுடியம்மா..தாய்தந்தை, காய்கறி, வெற்றிலைபாக்கு, தாய்சேய்..அப்படின்னு... நீ தமிழ் படிச்சியா இல்லையோ.. என்னவோ போடியம்மா..ஒரு விவரமும் தெரியாமா பதிவு மட்டும் நன்னா போடறே...!