’இப்போது சினிமாவில் ஒரு குடும்பம் என்ற உணர்வு என்பது இல்லாமல் இருக்கிறது. கேரவன் என்ற கலாச்சாரம் எப்போது வந்ததோ அப்போதே நமக்குள் பிளவு வந்துவிட்டது. ரஜினி எஜமான் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் தென்னஓலையை போட்டுப் படுத்துக் கொள்வார்.ஆனால் இப்போது மார்கெட்டே இல்லாத நடிகர்கள் கூட கேரவன் கேட்கிறார்கள்’என்கிறார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.

திரைப்பட விழாக்களில் சர்ச்சையாகவும் சுவாரசியமாகவும் பேசுவதால் தற்போது இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரை அடிக்கடி பார்க்கமுடிகிறது.வி சினிமா க்ளோபல் நெட்வொர்க்ஸ் வழங்கும் படம் ’எவனும் புத்தனில்லை’. விஜயசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா  இன்று சென்னை கமலா தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி உதயகுமார்,’முதலாவதாக இந்தப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் விஜயசேகரன் அவர்களுக்கு வாழ்த்துகள். நாங்களும் நிறைய விசயங்களைப் பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் தீர்வு கிடைக்க மாட்டேன்கிறது. எவனும் புத்தனில்லை சந்தர்ப்பம் கிடைக்காத வரை. வாய்ப்பு கிடைக்காத வரை நாம் அனைவரும் புத்தனாக இருக்கலாம். நல்லவனா கெட்டவனா என்றால் இந்த மேடையில் யாருமே இருக்க முடியாது. 

இந்த இயக்குநர் பங்ஷன் நடத்துறதிலேயே கில்லாடியா இருக்கிறார். அதனால் படத்தையும் நல்லா எடுத்துருப்பார் என்று நம்புகிறேன். இப்படம் பிரமாதமா வந்திருக்கு. சினிமா என்பது மிகப்பெரிய ஆளுமை கொண்ட ஊடகம். அப்படியான சினிமாவில் சிஸ்டம் சரியில்லை. சிஸ்டம் சரி செய்கிறேன் என்று வருபவர்கள் கூட திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்து நாட்டைக் காப்பத்துவதை விட அவர்கள் வளர்ந்த, அவர்களை வளர்த்த சினிமாவில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யலாம். இப்பவும் சொல்றேன் பெரிய சம்பளம் வாங்கும் நாலு நடிகர்கள் ஒண்ணா உட்கார்ந்து பேசினாலே சினிமாவில் இருக்கும் சிக்கல்கள் தீர்ந்துவிடும். 

தியேட்டரில் இருந்து வரும் டிக்கெட் ஷேரை விட பாப்கார்ன் காசிலும் நமக்கு பங்கு வந்தால் சிறுபட தயாரிப்பாளருக்கு வருமானம் வரும். தமிழ்சினிமாவில் தான் நிறைய நல்ல கிரியேட்டர்ஸ் இருக்கிறார்கள். இப்போது சினிமாவில் ஒரு குடும்பம் என்ற உணர்வு என்பது இல்லாமல் இருக்கிறது. கேரவன் என்ற கலாச்சாரம் எப்போது வந்ததோ அப்போதே நமக்குள் பிளவு வந்துவிட்டது. ரஜினி எஜமான் படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் தென்னஓலையை போட்டுப் படுத்துக் கொள்வார். அவ்வளவு எளிமையான மனிதர் அவர். அவரை எல்லாம் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அழைத்தால் வருவார். இப்படத்தில் சினேகன் பிறந்தபலனை அடைந்து விட்டார்..அவர் பதினைந்து பெண்கள் மத்தியில் மிதக்கிறதைப் பார்த்தால் அவ்வளவு அழகாக இருக்கிறது. இந்தப்பங்ஷன் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அதுபோல் படமும் வெற்றிபெறும்" என்றார்.