பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றை வைத்து படமாக  எடுக்கப்பட்டு உள்ள படம் பி.எம். நரேந்திரமோடி. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகிரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

ஓமங் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், பிரதமர் நரேந்திரமோடியாக நடித்து உள்ளார். நேற்று இரவு வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் இதுவரை 1 மில்லியனுக்கும் மேலாக பார்த்து உள்ளனர்.

இரண்டரை நிமிடம் கொண்ட இந்த ட்ரெய்லரில், மோடியின் ஆரம்ப கால கட்டம் முதல் தன் தாய் மீது கொண்ட அன்பு, பாசம், நாட்டுக்காக முன்னெடுத்து சென்ற விதம், மாநிலத்தின் முதல்வராக தேர்தெடுத்தது என பல முக்கிய சீன்களை ட்ரெய்லரில் வைத்து உள்ளனர். இதை பார்க்கும் போதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கிடைக்கிறது.

இந்த படத்தின் காட்சிகள் குஜராத், மும்பை, உத்திரகாண்ட் உள்ளிட்ட மாநிலத்தில் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரை விவேக் ஓபராய் தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

 

இதில் கவனிக்க பட வேண்டிய விஷயம் என்னவென்றால், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் இந்த தருணத்தில் பி.எம் நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் வெளியானது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.