Asianet News TamilAsianet News Tamil

Vani Jayaram: வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் அஞ்சலி

பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

PM Modi, MK Stalin and film industry condole for Vani Jayaram Demise
Author
First Published Feb 4, 2023, 8:33 PM IST

பிரபல பின்னணிப் பாடகர் வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, இந்தி, முதலிய பல மொழிகளில் பாடியவர். ஆயிரத்துக்கு மேற்பட்ட படங்களில் 10,000 பாடல்கள் இவர் குரலில் ரம்மியமாக ஒலித்தன. சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 3 முறை வென்ற இவருக்கு, கடந்த ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு இவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’, ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு’, ‘ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்’, ‘ஏபிசி நீ வாசி’ பாடல்களை மனதை மயக்கும் குரல்களில் பாடியவர் வாணி ஜெயராம்.

இவர் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) காலமானார். 78 வயதான அவரது மறைவுக்கு தலைவர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி:

திறமையான வாணி ஜெய்ராம் அவர்கள் பல மொழிகளில், பல்வேறு உணர்வுகளை பிரதிபலிக்கும் பாடல்களைப் பாடியவர். அவர் தனது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார். அவருடைய மறைவு இசை உலகத்துக்கு பெரிய இழப்பு. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கிறேன்.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்:

19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர் வாணி ஜெயராம் என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டபோது, தான் வாழ்த்து தெரிவித்த நிலையில், விருது பெறும் முன்னரே இவ்வுலகை அவர் விட்டுப் பிரிந்தது பெரும் துயரம்.

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாணி ஜெயராம்... இன்று காலை நடந்தது என்ன? பணிப்பெண் கூறிய பரபரப்பு தகவல்!

PM Modi, MK Stalin and film industry condole for Vani Jayaram Demise

ஆளுநர் ஆர். என். ரவி இரங்கல்:

தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வாணி ஜெயராமின் உடல் வைக்கப்பட்டுள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். "இசை உலகில் அவரது பாரம்பரியம் என்றும் நிலைத்திருக்கும்" என்று ஆளுநர் கூறியுள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்:

பிரபல பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகி திருமதி.வாணி ஜெயராம் அவர்கள் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும்,மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. தனது இனிமையான குரல் வளத்தால் அனைவரும் மனதிலும் இடம் பிடித்த வாணி ஜெயராம் அவர்களுக்கு அண்மையில் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்து கௌரவித்தது. அவரது இழப்பு இசை ரசிகர்களுக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன்:

இசைத் துறையில் தன்னிகரற்ற இடம் பதித்த சிறந்த பின்னணி பாடகியும், மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு தேர்வான வாணி ஜெயராம் அவர்கள் மறைவு செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

19 மொழிகளில் சுமார் ஆயிரம் படங்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, தமிழ் திரையுலகில் மட்டுமின்றி, பல்வேறு மொழிகளில் முன்னோடியாக திகழ்ந்த பிரபல பாடகி வாணி ஜெயராம் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

சேலத்தில் காதலியுடன் இருந்த போது திடீரென குறுக்கிட்ட தாய்; கீழே குதித்த மாணவர் பலி

PM Modi, MK Stalin and film industry condole for Vani Jayaram Demise

மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன்:

வார்த்தைகளுக்குப் பதவி உயர்வு கொடுப்பது போன்றதொரு அரிய பாணியில் எத்தனையோ பாடல்களை உலகுக்குப் பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம் அம்மையார் அமைதியடைந்திருக்கிறார். அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கும். அவருக்கென் அஞ்சலி.

பிரபல பாட சித்ரா:

வாணி அம்மாவின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டபோது நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். நம்பவே முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவரோடு பேசினேன். அது இப்போது ஒரு புராணக்கதை போல இருக்கிறது. அவர் வலுவான கிளாசிக்கல் அடித்தளம் கொண்டவர். பலவிதமான பாடல்களை பல மொழிகளில் பாடியவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

பாடகி சின்மயி:

வாணி ஜெயராம் அவர்கள் காலத்தைக் கடந்து நிற்கக்கூடிய கலைஞர். அவர் எப்போதும் போற்றபடுபவராகவும் கொண்டாடப்படுபவராகவும் இருப்பார்.

கவிப்பேரரரசு வைரமுத்து:

நீங்கள் எனக்குப் பாடிய
முதல் பாடலையே
இறுதி அஞ்சலியாய்ச் செலுத்துகிறேன்

"மேகமே மேகமே
பால்நிலா தேய்ந்ததே
தேகமே தேயினும்
தேனொளி வீசுதே

உனக்கொரு மலர்மாலை
நான் வாங்க வேண்டும்
அது இதற்கோ?"

மறைந்த பிரபல பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி !!

Follow Us:
Download App:
  • android
  • ios