Please do not act in that film - request to Oviya from fans.
டபுள் மீனிங் படத்தில் நடிக்க வேண்டாம் என்று நடிகை ஓவியாவிற்கு அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீட்டில் இருந்து ஓவியா வெளியேறிய பின் மீண்டும் அந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்றும், திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிக்கும் ‘ஹர ஹர மகாதேவகி’ படத்தின் இசை வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.
அதில், இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அது “இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்பதுதான்.
இப்படத்திலும் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்றும், அவருக்கு ஜோடியாக ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதற்கு அவர் ஒப்புதல் கேட்டுள்ளோம்” என்றும் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பைக் கண்ட, “ஓவியா ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவிற்கு நல்ல பேர் கிடைத்துள்ளது. மலையாள நடிகையான அவருக்கு படத்தின் தலைப்பு பற்றி தெரியுமோ? தெரியாதோ? ஆனால், இப்படி டபுள் மீனிங் கொண்ட படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அவரது இமேஜ் சரியும்” என்றும் “இப்படத்தில் அவர் நடிக்க வேண்டாம்” அல்லது படத்தின் தலைப்பை மாற்றச் சொல்ல வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
