த்ரிஷாவின் ப்ளஸ் மைனஸ் இரண்டுமே அவரது அம்மாதா. த்ரிஷாவிடம் ஜோக் சொன்னால், அவருக்கு பதிலாக அவர் அம்மாதான் சிரிப்பார். அவர்களுக்குள் அப்படியொரு குளோனிங் சிஸ்டம். த்ரிஷா நடிக்க வேண்டிய படத்தின் கதையை அம்மாவே கேட்டு முடிவு செய்கிறார். கேமிராவுக்கு முன் நிற்கிற வரைக்கும் கூட கதை என்ன என்று கேட்பதில்லை த்ரிஷா. இயக்குனர் சொல்வதுதான் எல்லாம்.

அப்படியிருக்க, தானே எல்லாம் என்று நம்புகிற நயன்தாராவை எப்படி முறியடித்து... எப்படி முன்னுக்கு வருவது? அந்த போட்டி நினைப்பும் கூட இல்லையாம் த்ரிஷாவுக்கு. லீவு கிடைத்தால் வெளிநாடு. நேரம் இருந்தால் உள்நாடு என்று ஓடிக் கொண்டிருக்கும் அவரை, குதிரைபோல வளைத்து ரேசில் ஓட்டிக் கொண்டிருக்கும் அம்மா, தெலுங்கு இந்தி என்று கதையை கேட்டு கைக்குள் வைத்திருக்கிறார் என்பதுதான் ட்விஸ்ட்!