படம் டல் அடித்தாலும்... முதல் நாள் வசூலில் தாறுமாறு செய்த 'பிச்சைக்காரன் 2'!படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு!
'பிச்சைக்காரன் 2' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் சசி இயக்கத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'பிச்சைக்காரன்' படத்தின் இரண்டாம் பாகமாக பிச்சைக்காரன் 2 படம் எடுக்கப்பட்டிருந்த நிலையில், இப்படம் நேற்று வெளியானது. முதல் பாகத்தின் வெற்றி, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்த நிலையில்... இப்படம் நேற்று வெளியானது முதலே தொடர்ந்து கலவையான விமர்சனங்ளையே பெற்று வருகிறது.
'பிச்சைக்காரன்' படத்தில் முதல் பாகம், விஜய் ஆண்டனியின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் அளவான சென்டிமென்ட், அசத்தலான காதல் காட்சிகள், கதைக்கு தேவையான மாஸ் காட்சிகள், என பக்கா கமர்சியல் சப்ஜெக்டாக இப்படத்தை இயக்கி வெற்றியை கொடுத்தார் இயக்குனர் சசி.
ஆனால், விஜய் ஆண்டனியே இயக்கி நடித்துள்ள இரண்டாம் பாகம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என்று, ரசிகர்கள் மற்றும் நெட்டிசங்கள் 'பிச்சைக்காரன் 2' படத்திற்கு கலவையான விமர்சனங்களையே தெரிவித்து வருகிறார்கள். இப்படத்தின் மிகப்பெரிய மைனஸாக ரசிகர்கள் சொல்வது இப்படத்தின் விறுவிறுப்பில்லாதா கதைக்களத்தையும், படு மோசமான வி .எப்.எக்ஸ் காட்சிகளையும் தான். அதே நேரம் ஆன்ட்டி பிங்கிலி ஐடியா இப்படத்தில் புதிதாக பார்ப்படுகிறது.
அண்ணண் தங்கை செண்டிமெண்ட், காதல் காட்சி என ஏதும் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகவில்லை. யோகி பாபு வழக்கம் போல் இப்படத்திலும் காமெடியில் ஸ்கோர் செய்துள்ளார். ஒரு வேலையை இப்படத்தை சசி இயக்கி இருந்தால், வேறு மாதிரி இருந்திருக்குமோ என்று தோன்றவைக்கிறது. அதேநேரம் முதல் முறையாக விஜய் ஆன்டனி படத்தை இயக்கி, கொஞ்சம் சொதப்பி இருக்கிறார் என்றே கூறுகின்றனர் நெட்டிசன்கள்.
அதே நேரம் படத்தில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் இது படமாக பார்க்க நன்றாகவே இருக்கிறது. அனைவரும் கண்டிப்பாக ஒருமுறையாவது பார்க்க வேண்டிய படம் என கூறிவருகிறார்கள். இந்நிலையில் பிச்சைக்காரன் பாம் முதல் நாள் வசூலில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் மாஸ் காட்டியுள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள தகவலில், பிச்சைக்காரன் 2 திரைப்படம் , 3.25 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதே போல் தெலுங்கில், 4.5 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிதிக்கப்பட்டுள்ளது. எனினும் இனிவரும் நாட்களிலும் இதே போல் வசூலில் வாரி குவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.