அட கன்றாவியே... ஓடும் பேருந்தில் நடிகை முன் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர்! வீடியோ எடுத்து... அளவிட்ட சம்பவம்!
ஓடும் பேருந்தில், நடிகையின் முன்பு சுய இன்பம் செய்து, சிக்கிய நபரை... பஸ் கண்டக்டர் மற்றும் சக பயணிகள் ஒத்துழைப்போடு பிடித்து, நடிகை ஒருவர் போலீசில் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூரிலிருந்து, கொச்சி செல்வதற்காக நடிகையும் மாடல் அழகியுமான நந்திதா என்பவர் தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது அருகில் சவாத் ஷா என்ற இளைஞர் அமர்ந்துள்ளார். நடிகையிடம் சாதாரணமாக பேச்சுக்கொடுத்துள்ளார். பின்னர் அவரின் செய்கைகள் மிகவும் கீழ்த்தனமாக மாறியுள்ளது. திடீரென நடிகை எதிர்பாராத சமயத்தில், நடிகையின் மேல் கை வைத்தபடி, சுய இன்பத்தில் ஈடுட்டுள்ளார்.
இந்த காட்சி ஒரு நிமிடம் நந்திதாவை அதிர வைத்து விட்டது. பின்னர் மிகவும் போலடாக... அந்த அயோக்கியனின் செயலை ஆதாயத்திற்காக வீடியோ எடுக்க துவங்கியதோடு, கத்தி கூச்சலிட்டு மற்ற பயணிகளிடம் இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர் நடிகைக்கு ஆதரவாக, அந்த பேருந்தின் கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகிய இருவரும் அந்த இளைஞரை போலீசில் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
ஜூனியர் 'என்டிஆர் 30' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
பேருந்தில் இருந்து கீழே இறங்கி, அந்த நபர் தப்பிக்க முயன்ற நிலையில், பேருந்தில் இருந்த சக பயணிகள் சவாத் ஷாவை தர்மஅடி கொடுத்து துரத்தி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். இப்படி கீழ்த்தனமான செயலில் ஈடுபட்ட நபரை போலீஸார், கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, நடிகையும், மாடலுமான நந்திதா, வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதே போல் பேருந்தில் தனக்கு பிரச்சனை என்றதும் ஓடி வந்து உதவிய, பேருந்து ஓட்டுநர், நடத்துனர், மற்றும் சக பயணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.