லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு  " பெட்டிக்கடை " என்று பெயரிட்டுள்ளனர்.இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார்.

இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார். கதா நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன்,ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத்,ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த இதன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பாரதிராஜா,“பெட்டிக்கடை என்பது நம் பண்பாட்டின் அடையாளம். நமது ஊர்களில் கடைகளை பெட்டிக்கடை என்று தான் அழைப்பார்கள். பழமையைப் பேசினால் எங்கு நாம் பின்னோக்கிப் போகிறோமோ என்று தோன்றும். ஆனால் அப்படியல்ல. நம் பண்பாட்டை நாம் பேண வேண்டும்; பேச வேண்டும். அப்படியான பண்பாட்டுக்கு நாம் போராடினால் நம்மை சமுக விரோதி என்கிறார்கள். இன்று சமூகத்திற்காக போராடினால் சமூகவிரோதி.

இந்த படத்தின் பாடல்களை பார்க்கும் போது என்னை நானே கண்ணாடியில் பார்த்துக் கொண்டது மாதிரி இருக்கு.மண்வாசனையை நாம் என்றும் விட்டுக் கொடுக்கக் கூடாது.

ஏதாவது நல்ல விஷயத்துக்காக பேசினாலே சமூக விரோதியாக்கப் பட்டு விடுகிறார்கள். இந்த இயக்குனர் பெட்டிக்கடை- No GST என்று வைத்திருக்கிறார்...இவருக்கும் பிரச்சனை வரலாம்  போராடிதான் ஆக வேண்டும் இல்லை என்றால் நாம் நம் பாரம்பர்யத்தை இழந்து விடுவோம், தழிழை இழந்து விடுவோம், நம் மண்ணை இழந்து விடுவோம் ! ஏன் இந்த பூமியையே இழந்து விடுவோம். இந்த படம் இசக்கி கார்வண்ணன் சமுத்திரகனி வீரா மரியா மனோகர் மடத்தமிழ் வேந்தன் என எல்லோருக்குமே நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித்தரும் ’’ என்றார்.

எல்லாம் சரிதான். ஆனால் படச்செய்தி தொடர்பாக அனுப்பப்பட்ட செய்தியில் பெட்டிக்கடைக்கு சம்பந்தமேயில்லாத ஏகப்பட்ட குட்டிகள் இருக்கிறார்களே என்ன சமாச்சாரம் டைரக்டர் சார்.