இந்தியா-பாகிஸ்தான் ஆடும் ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் மேட்சுக்கான பரபரப்புக்கு இணையானதுதான் நேற்று ஒரே நாளில் ரிலீஸான ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்களுக்கு நடந்த போட்டி. யார் ஒசத்தி என்று நடந்த அந்தப் போட்டியில் இளம் ரத்தமே ஜெயித்திருப்பதாக விநியோகஸ்தர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் வட்டாரங்கள் அடித்துச்சொல்கின்றன.

விமர்சகர்கள் மற்றும் அஜீத்,ரஜினி வெறியர்கள் அல்லாத ரசிகர்களின் ரிப்போர்ட்டைப் பொறுத்தவரை இரு படங்களுமே சுமார்தான். இருவருமே அரைத்த மாவையே மீண்டும் அரைத்திருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ‘பேட்ட’ முதல் பாதியில் ஸ்கோர் செய்து அசத்தியதை ‘விஸ்வாசம்’ இரண்டாம் பாதியில் சாதித்துக்காட்டியது. சினிமாவில் எப்போதுமே இரண்டாவது பாதியின் விறுவிறுப்பு மட்டுமே ஜெயிக்கும். அதுதான் ‘விஸ்வாசத்துக்கு சாதகமாக மாறியது.

விஸ்வாசம் 14.5 கோடி... பேட்ட 11.5 கோடி;-

இறுதியில் நேற்றைய நிலவரத்தைப் பொறுத்தவரை தமிழக வசூலைப் பொறுத்தவரை அஜீத்தின் ‘விஸ்வாசம்’ சுமார் 14.5 கோடி வரை வசூலித்து வெற்றிக்கொடியை வீசிப்பறக்கிறது. ‘பேட்ட’ வசூலுக்கும் குறைச்சலில்லை. அதன் முதல் நாள் வசூல் 11.5 கோடியை எட்டிப்பிடித்துள்ளது. இன்று ‘பேட்ட’ படம் கொஞ்சம் ட்ரிம் பண்ணப்படவிருப்பதால் அஜீத் படத்தின் வசூலை நெருங்கக்கூடும் என்கிறார்கள்.