இயக்குநர் சிவா இயக்கும் இந்தப் படத்தில் அஜித் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஸ்வாசம் டீசரை ரசிகர்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கும் நிலையில், படத்துக்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கிராமத்து வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில்  அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். டி.இமான் இசையில் பாடல்கள் சக்கைப்போடு போட்டுள்ளது.

பொங்கலுக்கு தாறுமாறாக வெளியாகும் இப்படத்தின் சென்சார் போர்டு சர்டிபிக்கேட் வந்துவிட்டது. தணிக்கை துறை படத்திற்கு “U” கொடுத்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.இப்படத்தில்  ரன்னிங் டைம் 2 மணி 24 நிமிடமாம்.

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது. இமான் இசையில், இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது. மோஷன் போஸ்டர் கூட இதுவரை எந்த இந்திய படங்களும் செய்யாத அளவிற்கு சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே, தற்போது விஸ்வாசம் வீடியோக்கள் இணையத்தில்  செம்ம வைரல்.

அதேபோல் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’ பொங்கலுக்கு முன்னதாக 11-ம் தேதி  படம் திரைக்கு வர இருப்பதாக தெரிகிறது.   பேட்ட படத்தின் ரன்னிங் டைம் சுமார் 2 மணி நேரம் 52 நிமிடம் ஓடும் என குறிப்பிட்டுள்ளனர். 

10-ம் தேதி வியாழக்கிழமை  என்பதால் சென்டிமென்ட்டாக விஸ்வாசம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து ஒரு நாள் கழித்து பேட்ட படம் 11  ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் படக்குழு வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.