தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட், முன்னணி நடிகர்கள் நடித்த படம் ரிலீஸ் நாளில் பிற படங்கள் ரிலீஸ் ஆவதில்லை. 2019 ஜனவரி பொங்கல் பண்டிகை அன்று ஏற்கனவே திட்டமிட்டபடி அஜித் நடித்துள்ள விஸ்வாசமும் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படமும் ரிலீஸ் ஆகின்றன.

விஸ்வாசம் படத்திற்குத் தமிழ்நாட்டில் திருச்சி ஏரியா தவிர்த்து அனைத்து ஏரியாக்களிலும் அவுட் ரேட் அடிப்படையில் வியாபாரம் முடிந்துவிட்டது. மதுரை, சேலம் ஏரியாவில் உள்ள 60% தியேட்டர்களில் படம் திரையிடுவதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள 70% திரையரங்குகள் விஸ்வாசம் படத்தைத் திரையிட வாடகை அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாக வதந்தி ஒன்று ஊடகங்களில், சமூக வலைதளங்களில் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இது உண்மையில்லை என்ற போதிலும் பேட்ட படத்திற்குத் தமிழகத்தில் அதிக அளவு தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிர்பந்தத்திரரு தள்ளப்பட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தைச் சினிமாவில் வியாபாரத்தைத் தீர்மானிக்கும் குறிப்பிட்ட நபர்களுக்குக் கொடுப்பதில்லை என்பதில் சன் பிக்சர்ஸ் உறுதியாக இருந்தது. இம்முறையும் அதில் உறுதியாக இருக்கிறது. 

அதனால் சென்னையை  தவிர்த்து ஏழு ஏரியா உரிமைகள் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.கோவை ஏரியா உரிமை அப்பகுதி விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் ராஜமன்னார், திருச்சி ஏரியா உரிமை அப்பகுதியில் அதிகமான திரையரங்குகளைப் பராமரித்து வரும் பிரான்சிஸ் ஆகியோரிடம் வழங்கியுள்ளது சன் பிக்சர்ஸ்.

மதுரை, சேலம் ஏரியாவில் அதிக எண்ணிக்கையில் விஸ்வாசம் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்ட நிலையில் அங்கு பேட்ட படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்காது. நவம்பர் 29 அன்று வெளியான ரஜினியின் 2.O வசூல் அடிப்படையில் தோல்வியைச் சந்தித்திருப்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் அஜித் படத்தையே படத்தை திரையிட விரும்புகின்றனர் என கூறுகின்றனர் தியேட்டர் வட்டாரத்தில்.

இதனால் பேட்ட படத்திற்கு அதிகமான அளவு அட்வான்ஸ், எம்.ஜி என்கிற நிபந்தனையின்றி தியேட்டர்களை ஒப்பந்தம் செய்ய விநியோகஸ்தர்கள் முயற்சிக்கும் பட்சத்தில் அதிக தியேட்டர்கள் பேட்ட படத்திற்கு கிடைக்கும். முந்தப் போவது, முதலிடத்திற்கு வரப்போவது தலயா? சூப்பர்ஸ்டாரா? என்பது டிசம்பர் 21க்குப் பின் தெரியவரும்.

ஆக, 2.ஓ வில் ரஜினிக்கு வில்லன் அக்ஷய் குமாராக இருக்கலாம் அனால் பேட்ட'க்கு வில்லன் அஜித்குமார் தான் என நெட்டிசன்ஸ் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.