‘2.0’ படத்தின் தோல்வியால் துவண்டுகிடக்கும் ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதல் பரிசாக இன்னும் 2.0 தினங்களில் அதாவது வரும் 3ம் தேதியன்று அவரது ‘பேட்ட’ படத்தின் ஒற்றைப் பாடல் ஒன்று வெளியாகிறது.

இச்செய்தையை படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸும், இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜும் இன்று காலை தங்கள் ட்விட்டர் பதிவுகளின் மூலம் தெரிவித்துள்ளனர். அந்தப் பாடல் ஒரு மரண மாஸ் குத்துப்பாடல் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

‘2.0’ படத்தை வியாழனன்று ஒரு வேலை நாளில் ரிலீஸ் செய்திருக்கக்கூடாது. வெள்ளிக் கிழமையிலிருந்து படம் பிக் அப் ஆகிவிடும் என்று ஒரு மூட நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. ஆனால் வெள்ளியன்று கலெக்‌ஷன் மேலும் மோசமாக பல தியேட்டர் ஓனர்களே படத்தின் தோல்வியை உறுதி செய்தனர்.

இந்நிலையில் ‘2.0’ தோல்வியை மறக்கடிக்கும் வகையில் ‘பேட்ட’ படத்தின் முதல் பாடல் வரும் திங்களன்றும், அடுத்த பாடல் வரும் 7ம் தேதி வெள்ளியன்றும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.