நேற்று வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக நடித்துள்ளார். “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற வசனத்தில் தொடங்கும் பேட்ட படத்தில் “ஒரு நல்லாட்சி எப்படி இருக்குமோ அப்படி தான் இனிமே இந்த ஹாஸ்டல் இருக்கும்.

 

புதுசா வருபவர்களை தொறத்துற அரசியல் இங்கு இருந்து தான் தொடங்குது. நான் நல்லவன் தான். ரொம்ப நல்லவன் கிடையாது. ” என்ற அரசியல் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, சிகுமார், பாபி சிமஹா போன்ற பெரிய நட்சதிதிர பட்டாளமே  நடித்துள்ளது. கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ள இப்படம் மிக நீளமாக இருக்கிறது என சிலர் குறை சொல்கின்றனர்


தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால்  ராசிபுரத்தில் சாமுண்டி, விஜயலட்சுமி ஆகிய இரண்டு திரையரங்குகளில் பேட்ட படம் வெளியானது.

 

இந்த இரண்டு திரையரங்குகளிலும் சொற்ப அளவிலேயே கூட்டம் இருந்ததால் திரையரங்கு வெறிச்சோடி காணப்பட்டது.