சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி உள்பட மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாகவிருப்பது அனைவரும் அறிந்தது தான். அனால் இதுவரை படம் வெளியாகும் தேதி குறித்து எந்த ஒரு செய்தியையும் வெளியிடாமல் இருந்தது படக்குழு.

இந்நிலையில் தற்போது பேட்ட படத்தின் புது போஸ்டரோடு 'பேட்ட' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சக்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில்,  உலகம் முழுவதும் ஜனவரி 10ல் ரிலீஸ்' என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 10, ஒரே நாளில் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 12 சனிக்கிழமை முதல் ஜனவரி 17 வியாழன் வரை நீண்ட  விடுமுறை இருப்பதால் இரண்டு பெரிய படங்கள் ரிலீஸால் வசூல் பாதிக்க வாய்ப்பில்லை என்றும், இரண்டு படங்களுக்கும் நல்ல ஓப்பனிங் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.