பொங்கலுக்கு ரிலீஸாகும் ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ ஆகிய இரு படங்களுமே சென்ஸார் சர்டிபிகேட் பெற்றுவிட்டன. அஜீத் படம் குடும்பத்துடன் பார்க்கும் படமாக ஒரு சேதாரமும் இல்லாமல்  ‘யு’ சான்றிதழ் பெற்றிருக்கும் நிலையில் ரஜினியின் படம் ஆறு திருத்தங்களுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘பேட்ட’  படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆட்ட முடியாது', ’த்தா...'சூத்தானது', 'முண்ட', 'கூ', 'ராகுல்' ஆகிய வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், துப்பாக்கிச் சூடு காட்சியும், ரத்தக்கறை காட்சியும் குறைக்கப்பட்டுள்ளன. இவை தான் ’பேட்ட’ படத்தில் இருந்து வெட்டப்பட்ட காட்சிகளாகும்.

மற்ற வசனங்கள் கெட்ட வார்த்தைகள் என்று அறியப்பட்ட நிலையில் ‘ராகுல்’ என்ற வார்த்தையை சென்ஸாரில் ஏன் மியூட் செய்யச்சொல்லியிருக்கிறார்கள் என்பது விளங்கவில்லை. ஒருவேளை பிஜேபி ஆதரவாளரான ரஜினியின் மனம் குளிர்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கார்த்திக் சுப்பாராஜ் கிண்டலடித்திருப்பாரோ என்பதை படம் ரிலீஸாகும்போதுதான் சொல்லமுடியும்.