நடிகை கடத்தல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நடிகர் திலீப் வெளிநாடு செல்ல அனுமதி கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு  கொடுத்திருந்தார்.

இத வழக்கு  இன்று   விசாரணைக்கு  வந்தது. அதில் திலீப்  தரப்பில்  கூறப்பட்டு  உள்ளது என்னவென்றால், "வரும் 29  ஆம் தேதி துபாயில் உணவக திறப்பு விழாவில் பங்கேற்க அனுமதி வேண்டும் எனவும் அதற்காக  தனக்கு பாஸ்போர்ட்டையும்  தர  ஆவண செய்யுமாறு  கோரிக்கை  வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து  துபாயில் 29ம் தேதி உணவக திறப்பு விழாவில் பங்கேற்க அனுமதி  அளித்து  கேரள உயர்நீதிமன்றம்  அனுமதி  அளித்தது. 

வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியதுடன் 7 நாட்களுக்கு பாஸ்போர்ட்டை தரவும் கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதி கிடைத்த  மகிழ்ச்சியில்  உள்ள  நடிகர்   திலீப்  தற்போது  வெளிநாடு செல்ல ஆயத்தமாகி  வருகிறார்.