Asianet News TamilAsianet News Tamil

உங்கள் அரசின் செயல்பாடுகள் ஊக்கமளிக்கிறது..! முதல்வர் முக ஸ்டாலினுக்கு பவன் கல்யாண் வாழ்த்து..!

தமிழக முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் பதவி ஏற்றத்தில் இருந்து, மக்களுக்கு பயனளிக்கும் விதமாக... பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார்.

pawan kalyan released wishing statement for tamilnadu chief minister mk stalin
Author
Chennai, First Published Sep 1, 2021, 11:20 AM IST

தமிழக முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் பதவி ஏற்றத்தில் இருந்து, மக்களுக்கு பயனளிக்கும் விதமாக... பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். அதே போல் உலக நாடுகளையே உலுக்கி எடுத்த கொரோனாவை கட்டு படுத்துவதிலும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில், தினமும் வேலைக்கு செல்லும் பெண்கள் பயன்பெறும் விதமாக இலவச பேருந்து வசதியை கொண்டு வந்தார் தமிழக முதல்வர். இதன் மூலம் கிராமப்புறம், மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இருக்கும் அதிக பெண்கள் பயனடைந்துள்ளனர். அதே போல் சமீபத்தில் கல்லூரி மாணவர்களுக்கும் பேருந்து சேவை இலவசம் என அறிவிக்கப்பட்டது. விரைவில் பெண்களுக்கு மாதம் தோறும், உதவி தொகை வழங்கப்படும் என்கிற அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. இது போன்ற அசத்தலான திட்டங்கள் மூலம், மற்ற மாநிலங்களையும் தமிழகம் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.

pawan kalyan released wishing statement for tamilnadu chief minister mk stalin

இந்நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் அவர்களுக்கு, ஜனசேன கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

pawan kalyan released wishing statement for tamilnadu chief minister mk stalin

இதில் கூறி இருபதாவது, "எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால், அரசியல் செய்ய வேண்டும். ஆனால். ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக்கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி, நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கம் அளிக்கும் விதத்தில் உள்ளது. உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என ஜனசேனா கட்சி தலைவரும் பிரபல நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios