பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள பாவனிக்கு, சக போட்டியாளரான அமீர் முத்தம் கொடுத்த வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் (BiggBoss 5) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த சீசனில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் என்றால் அது அபிநய் - பாவனி இடையேயான காதல் சர்ச்சை தான். இந்த சர்ச்சைக்கு கடந்த வாரமே முடிவு கட்டப்பட்டது. இதையடுத்து அபிநய் எலிமினேட் செய்யப்பட்டார். இதையடுத்து தற்போது அமீர் - பாவனி இடையே காதல் மலர்ந்துள்ளதாக புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.

சமீபத்தில் பாவனியின் கன்னத்தில் அமீர் முத்தம் கொடுத்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த வாரம் பாவனி அல்லது அமீரை எலிமினேட் செய்ய பிக்பாஸ் ரசிகர்கள் முடிவு செய்தனர். ஆனால் நாமினேஷன் லிஸ்டில் இருந்து அமீர் எஸ்கேப் ஆகி விட்டார். பாவனி மட்டுமே எஞ்சி உள்ளார்.
இணையத்தில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வமற்ற வாக்கெடுப்பில் பாவனி தான் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார். அதனால் இந்த வாரம் பாவனி வெளியேற்றப்பட அதிகம் வாய்ப்புள்ளது.
