பிரேமம் படத்தில் சாய்பல்லவி ஏற்று நடித்த மலர் டீச்சரை, ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். அவரது உண்மை பெயரே மறந்து போகும் அளவுக்கு மலர் டீச்சர்... மலர் டீச்சர் என சாய்பல்லவியை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது, பிரேமம் மலர் டீச்சரையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு பவி டீச்சர் கொண்டாடப்பட்டு வருகிறார். 

கடந்த சில வாரங்களாக யூ-டியூப்பில் ஒளிபரப்பாகிவரும் வெப்சீரிஸ்தான் 'ஆஹா கல்யாணம்'. இந்த சீரிஸில், பவி டீச்சராக நடிக்கும் பிரிகிதாதான், இன்றைய இளைஞர்களின் தூக்கத்தை கலைக்கும் அழகான ராட்சஷியாகியுள்ளார்.அந்த அளவுக்கு, இளைஞர்களை தனது வசீகரத்தில் வசியம் செய்துள்ள பவி டீச்சர், தமிழ் திரையுலகினரையும் விட்டுவைக்கவில்லை. 

அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'பவி டீச்சர்' பிரிகிதாவை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்துள்ளார்.
ஆமாங்க, முதல்முறையாக தளபதி விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படம் 'தளபதி-64'. இந்தப் படத்தில்தான் ஒரு முக்கிய கேரக்டரில் 'பவி டீச்சர்' பிரிகிதா நடிக்கிறார். 

'தளபதி-64' படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்பு, கடந்த 3 வாரங்களாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில், விஜய், ஹீரோயின் மாளவிகா மோகனன் மற்றும் '96' புகழ் கவுரி கிஷான், வி.ஜே. ரம்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் பிரிகிதாவும் இணைந்துள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் கல்லூரி காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. 

'தளபதி 64' படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள்தான் தற்போது சமூகதலைதளத்தையே கலக்கு கலக்கு என கலக்கி வருகிறது. தளபதி-64 படக்குழுவுடன் பவி டீச்சர் இருக்கும் புகைப்படங்களை பார்த்து லைக்ஸை அள்ளி வீசிவரும் ரசிகர்கள், பிரிகிதாவுக்கு வாழ்த்து்ககளை தெரிவித்து வருகின்றனர்.